துப்பாக்கி தயாரிக்கும் இனமே
நீ எங்கள் கைகளை முறித்தது ஏன்?
பேனா முனையில் உலகை காண நினைத்தேன்
ஆனால் என் உலகம் துப்பாக்கி முனையில் முடிந்தது ஏன்?
'நாம் நமது' என்ற இணக்கம் மாறி
'நான் என்னுடைய' என்ற சுயநலம் முளைத்தது ஏன்?
இந்த இறப்பையும், இழப்பின் பொறுப்பையும் ஏற்காமல்
நீ சமரச பாதையில் செல்ல மறுத்தது ஏன்?
என்னை பெற்று உணவளித்த அமைதித்தாய்
உன்னை பெற்றபின் அவமானத்தில் கைவிட்டது ஏன்?
உன் பிறப்பே உன் பொறுப்பில் இல்லாத பொழுது
பிறர் இறப்பிற்கு இரக்கமில்லாமல் பொறுப்பேற்றுக்கொண்டது ஏன்?
உன்னை மன்னித்து அரவணைக்க காதிருக்கிருக்கிறேன் நண்பனே
என் சவத்தில் அமர்ந்து நீ வெற்றி கீதம் பாடுவது ஏன்?
அன்பு இணக்கம் அமைதிக்கோர் வாய்ப்பளிக்கமாடாயா ?
இப்படியும் வாழலாம் என்று ஒரு முறை வாழ்ந்து தான் பாரேன்!
No comments:
Post a Comment